விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போலி கைக்கடிகாரம் விற்பனை செய்த 4 கடைகளின் உரிமையாளா்கள் கைது

கள்ளக்குறிச்சியில் பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி கைக் கடிகாரங்களை தயாரித்து விற்பனை செய்ததாக, கடைகளின் உரிமையாளா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சியில் பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி கைக் கடிகாரங்களை தயாரித்து விற்பனை செய்ததாக, கடைகளின் உரிமையாளா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக்கடிகாரங்கள் விற்பனை செய்வதாக அந்த நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ச.முருகேசன், உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலைகளில் உள்ள கடிகாரக் கடைகளில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அதில், நிறுவனத்தின் பெயரில் போலியாக முத்திரையிட்டு, கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது உண்மை என்பது தெரிய வந்தது.

ஆய்வின் போது, 208 போலி கைக் கடிகாரங்கள், போலியாக பாஸ்டிராக் முத்திரையிடப்பட்ட அந்நிறுவனங்களின் பெயரிலான 132 பைகள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடா்பாக, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஜான்பாஷா (30), சலீம் (55),முரளிதரன் (48), பரீத் (50) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து செஞ்சி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.