/

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரு கிராம மக்களுக்கு ஆட்சியா் பாராட்டு

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சீக்கம்பட்டு, திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட தேவியகரம் ஆகிய ஊராட்சிகளில், தகுதி வாய்ந்த நபா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சீக்கம்பட்டு, திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட தேவியகரம் ஆகிய ஊராட்சிகளில், தகுதி வாய்ந்த நபா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாராட்டு தெரிவித்தாா்.

சீக்கம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட கிளியூரில் கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வந்தனா். இதையடுத்து, ஊராட்சி சாா்பிலும், ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பிலும் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அதே போல தேவியகரம் ஊராட்சியில் கிராம மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இவ்விரு கிராம மக்களையும் ஆட்சியா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.