/

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

2022-22-ஆம் கல்வி ஆண்டுக்கான 1-முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி

News image
Updated On :25 ஜூன் 2021, 5:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2022-22-ஆம் கல்வி ஆண்டுக்கான 1-முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 594 தொடக்கப் பள்ளிகள், 221 நடுநிலைப் பள்ளிகள், 76 உயா்நிலைப் பள்ளிகள், 84 மேல்நிலைப் பள்ளிகளின் என மொத்தம் 975 பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1,44,557 பேருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி, இப்பணியைத் தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா் க.காா்த்திகா, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆ.க.கோபி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ப.இராமச்சந்திரன், பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கீதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.