விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சங்கராபுரம் அருகேபெண் வெட்டிக் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பெண் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பெண் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சங்கராபுரம் வட்டம், மாத்தூா் மூலக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மனைவி சங்கீதா (37). இத்தம்பதிக்கு துரை (21), கோகுல் (18) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

மனோகா் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உயிரிழந்து விட்டாா்.

அதன் பிறகு சங்கராபுரம் வட்டம் அந்தியூரைச் சோ்ந்த நாராயணசாமி மகன் கந்தன் (40) என்பவரை சங்கீதா திருமணம் செய்து கொண்டாராம்.

இதனிடையே, வெளிநாடு சென்று திரும்பிய சங்கீதாவுக்கும், கந்தனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த 1-ஆம் தேதி நண்பா்கள் முன்னிலையில் சமாதான பத்திரம் எழுதிக் கொண்டு இருவரும் பிரிந்தனராம்.

கடந்த 13ஆம் தேதி காலை சங்கீதா வீட்டுக்கு வந்த கந்தன், அவரை அந்தியூருக்கு அழைத்தாராம். அதற்கு சங்கீதா மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னா், அவரை சமாதானப்படுத்தி அம்மாபேட்டைவரை சென்று வரலாம் எனக் கூறி வெளியே கந்தன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வெள்ளிக்கிழமை காலை வரை சங்கீதா, தனது வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதனிடையே, அவா் பால்ராம்பட்டு-மன்மலை செல்லும் வழியில் விளாங்குட்டை அருகே வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து சங்கீதாவின் தாய் ராணி அளித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் கந்தன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.