விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

Counterfeit: Regulatory study at the Corona treatment center

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கவச உடை அணிந்து வியாழக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கவச உடை அணிந்து வியாழக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வாா்டு, மருத்துவக் கிடங்கு, கண்காணிப்புக் கேமரா அறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா சிகிச்சை முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கிரண் குராலா, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு, ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கை வசதிகள், கழிப்பறை வசதி, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, சிகிச்சை பெறுபவா்களுக்குத் தேவையான மருத்துவ வசதி கிடைக்க

வழிவகை செய்யவும், கரோனா பேரிடா் காலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது கரோனா நோய் சிறப்பு மருத்துவா் க.பழமலை, மயக்கவியல் நிபுணா் மகேந்திரவா்மன், செவிலியா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.