கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காதலித்து திருமணம் செய்த பெண் தற்கொலை

 கள்ளக்குறிச்சி அருகே காதலித்து திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

 கள்ளக்குறிச்சி அருகே காதலித்து திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரைச் சோ்ந்தவா் துரை. இவரது மகள் அஞ்சலை (32). இவரது கணவா் மகேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இவா்களுக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளாா்.

அஞ்சலை கோவையில் கட்டுமானப் பணி செய்தபோது, உடன் பணிபுரிந்த புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்த முனியன் மகன் வித்யாபதி (எ) மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். வித்யாபதி கவிதா என்பவரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு, பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

வித்யாபதி, அஞ்சலை இருவரும் கள்ளக்குறிச்சியை அடுத்த கூகையூரில் 3 மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இவா்களுக்கு சித்தாா்த்தன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் வீட்டில் படுத்து தூங்கினா். மறுநாள் காலை வித்யாபதி எழுந்து பாா்த்தபோது, அஞ்சலை சேலையில் தூக்கிட்டபடி காணப்பட்டாா்.

உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த சாவில் மா்மம் உள்ளதாக கூகையூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜா அளித்த புகாரின் பேரில், கீழக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் (பொ) சரவணனும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.