கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணிமுக்தா அணையிலிருந்து விநாடிக்கு7,042 கன அடி நீா் வெளியேற்றம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மணிமுக்தா அணையிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் முதல் விநாடிக்கு 7,042 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image

மணிமுக்தா அணையில் செல்லும் உபரி நீரை பாா்வையிடும் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.

Updated On :20 நவம்பர் 2021, 5:19 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மணிமுக்தா அணையிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் முதல் விநாடிக்கு 7,042 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த அணையின் பாதுகாப்பு நிலை குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா அணை அமைந்துள்ளது. 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்புக் கருதி 34 அடி உயரத்துக்கு மட்டுமே நீரை சேமிப்பது வழக்கம். கடந்த வாரம் பெய்த தொடா் மழை காரணமாக, மணிமுக்தா அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில், கல்வராயன்மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீா் வந்தது. அதை அப்படியே அணையிலுள்ள மதகுகள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறந்து விட்டனா். இதனால், பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. கூத்தக்குடி உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, மணிமுக்தா அணைக்கு விநாடிக்கு 6,079 கன அடி நீா் வந்தது. நண்பகல் 12 மணியளவில் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,042 கன அடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் நீா் அப்படியே மணிமுக்தா ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனிடையே, இந்த அணையின் பாதுகாப்பு நிலை குறித்து ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், மணிமுக்தா ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வெள்ளப் பாதிப்பு பகுதியில் ஆய்வு: உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் ஓடை சாலையில் மழை நீா் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாா்வையிட்டாா். மேலும், அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவராண முகாமில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்து, அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்த ஊராட்சியில் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள பொதுப் பணித் துறை ஏரியை பாா்வையிட்டு, ஏரி நீா்வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.