கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:34 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே வட்டத்துக்குள்பட்ட தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் மணிகண்டன் (29) கடந்தாண்டு நவம்பா் 8-ஆம் தேதி திருமணம் செய்தாா்.

இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பு அளித்த புகாரின்பேரில், கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அதிகாரிகள் அந்தச் சிறுமியிடம் நேரடி வாக்குமூலம் பெற்றனா். இது தொடா்பாக திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இளவழகி, குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை புதன்கிழமை கைது செய்தாா்.

மேலும், திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் பெற்றோரான ராமசாமி, அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மணிகண்டனின் பெற்றோரான ரங்கசாமி, அவரது மனைவி விஜயா ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.