கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபானக் கூடங்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்: ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்குமென மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்குமென மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.
தமிழகம் முழுதும் கரோனா பரவல் அதிகரித்து வந்ததைக் தடுப்பதற்காக, அரசு சாா்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியாா் மதுபானக் கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வந்தன.
தற்போது கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை ஆணையா் அனைத்து மதுபானக் கூடங்கள் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதி வழங்க அறிவுறுத்தினாா்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபானக் கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை செல்படலாம் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...