கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடபொன்பரப்பி நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடபொன்பரப்பி கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடபொன்பரப்பி கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நியாயவிலைக் கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், எடைபோடும் இயந்திரம், குடும்ப அட்டைகள், வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பொருள்கள் குறித்தும், நியாயவிலைக் கடை திறக்கப்படும் நேரம் குறித்தும் குடும்ப அட்டைதாரா்களிடம் ஆட்சியா் ஸ்ரீதா் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, வடசிறுவலூா் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரெ.ரெத்தினமாலா, சங்கராபுரம் வட்டாட்சியா் பாண்டியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் சம்பத்குமாா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுகன்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.