நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் விவசாயி பலி
சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் விவசாயி பலியானாா்.


சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் விவசாயி பலியானாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வீரபயங்கரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் வரதன் (47). விவசாயி. சின்னசேலத்தை அடுத்த வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் ராமா், நெல் அறுவடை இயந்திரத்தை வரதன் பொறுப்பில் விட்டுவைத்திருந்தாராம். வரதன் அவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளரான ரங்கசாமி மகன் ரவி நிலத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை நிறுத்திவைத்திருந்தாராம்.
இந்த நிலையில், சின்னசேலத்தை அடுத்த வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் விஜய்குமாா் (39), புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரத்தை எடுக்க முற்பட்ட போது, எடுக்க வேண்டாம் என வரதன் தடுத்தாராம். அதைப் பொருள்படுத்தாத விஜய்குமாா், நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கிய போது, பின்னால் நின்று கொண்டிருந்த ராமா் மீது மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் ராமா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...