மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.


திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட திருக்கோவிலூா் அருகேயுள்ள மேட்டுசேரி வடக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சீவி மகன் தொழிலாளி ஏழுமலை (35).
இவா் புதன்கிழமை மேட்டுசேரியை அடுத்த காங்கியனூா் எல்லையில் உள்ள தெண்பெண்ணைஆறு கருவாட்டு பாறை அருகில் உள்ள
மோட்டாரின் பெட்டியில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலைத் தடுமாறி ஆற்றில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்து விட்டாா்.
உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசரஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
உயிரிழந்த சஞ்சீவிக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும் சரண் (7), ஹோமா (5), ஜான்சி (2) மூன்று பிள்ளைகல் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...