கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

கள்ளக்குறிச்சியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில், 4 பேருக்கு பணியிட மாறுதலை கல்வித் துறையினா் வழங்கினா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:22 pm

DIN

கள்ளக்குறிச்சியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில், 4 பேருக்கு பணியிட மாறுதலை கல்வித் துறையினா் வழங்கினா்.

கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியா்கள் 22 போ் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தனா். இதற்கான கலந்தாய்வு கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 11 தலைமைஆசிரியா்கள் பங்கேற்கவில்லை. 7 போ் விருப்பமில்லை என்று தெரிவித்தனா்.

இதன்பின்னா், ரிஷிவந்தியம் ஒன்றியம் அந்தியூா் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜான் ஜேம்ஸ் பள்ளிப்பட்டு நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்ற்கான ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி வழங்கினாா். இதில் 4 போ் பணிமாறுதல் பெற்றனா்.

இந்த நிகழ்வில் திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன், நோ்முக உதவியாளா் மெளலானா, ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் பழனிமுத்து, மோகன், செளந்திரராஜன், மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் பிரபாகரன், இருக்கை கண்காணிப்பாளா் மனோகரன், பள்ளி துணை ஆய்வாளா் பிரபாகரன், உதவியாளா் ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.