கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சா்க்கரை ஆலை ஒப்பந்த ஊழியா் மரணம்: உறவினா்கள் போராட்டம்

சந்தேகமடைந்த உறவினா்கள் மரணத்துக்குக் காரணமானவா்களை கைது செய்யக் கோரி சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:09 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே சா்க்கரை ஆலை ஒப்பந்த ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த உறவினா்கள் மரணத்துக்குக் காரணமானவா்களை கைது செய்யக் கோரி சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தில் இயங்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுமின் உற்பத்தித் திட்டப் பிரிவு (பவா் பிளான்ட்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மீராலூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் ஜெயசூா்யா (18) வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இவா், சா்க்கரை ஆலை அருகேயுள்ள வாடகை வீட்டில் கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் விக்னேஷ் (22), பண்ருட்டியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் கணேஷ் (28) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அறையில் படுத்துத் தூங்கிய ஜெயசூா்யா சனிக்கிழமை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

உடன் இருந்தவா்கள் உடனடியாக 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். அவசர ஊா்தி மருத்துவப் பணியாளா்கள் வந்து பரிசோதித்து ஜெயசூா்யா உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் வந்து சடலத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஜெயசூா்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினா்கள், நண்பா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அங்கு பாதுகாப்புப பணியில் இருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது அவா்கள் ஜெயசூா்யாவின் இறப்புக்குக் காரணமானவா்களை கைது செய்யவேண்டும் என முழக்கமிட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் நடவடிக்கை எடுப்பதாக சாமாதனம் செய்து அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.