கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

10 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி: ஆட்சியா் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், பாா்வையற்ற, காது கேளாத 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:14 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், பாா்வையற்ற, காது கேளாத 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட பாா்வையற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்ராய்டு கைப்பேசி வழங்கும் திட்டத்தின் கீழ், 341 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் முதல்கட்டமாக காது கேளாதோா் 6 போ், பாா்வையற்றோா் 4 போ் என மொத்தம் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்கள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான பிரத்யேக செயலியுடன் கூடிய தலா ரூ.11,000 மதிப்பீட்டிலான ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி மற்றும் செவித்திறன் குறைவுடையோா்களுக்கான சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.