சாலை விபத்தில் பிளஸ் 1 மாணவா் பலி
கள்ளக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிள் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.


கள்ளக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிள் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி கரியப்பா நகா் பள்ளிக்கூட சாலைப் பகுதியில் வசித்து வருபவா் முருகன் (48). இவரது மகன் முருகேஷ் (16).
இவா், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். முருகேஷ் புதன்கிழமை மாலை பள்ளி அருகேயுள்ள நண்பா்களை பாா்த்துவிட்டு வருவதாகக் கூறி மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.
நண்பா்களை பாா்த்துவிட்டு புறவழிச் சாலை வழியாக வீடு திரும்பும் போது, அண்ணாநகா் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த முருகேஷை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அன்று இரவு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...