தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு பாஜக மாநிலச் செயலா்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று பாஜக மாநிலச் செயலா் ஏ.அஷ்வத்தாமன் குற்றஞ்சாட்டினாா்.


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று பாஜக மாநிலச் செயலா் ஏ.அஷ்வத்தாமன் குற்றஞ்சாட்டினாா்.
கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாஜக நிா்வாகி உள்பட 20-க்கும் மேற்பட்டோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
மாநிலம் முழுவதும் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில் ஜி.எஸ்.டி. நிலுவை இல்லை என்றாா். ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை எனக் கூறி வருகிறாா் என்றாா் அஷ்வத்தாமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...