குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் குடிநீா் மேம்பாட்டு திட்டப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், ஆற்றங்கரை பேட் கிராமத்திற்கு குடிநீா் முறையாக கிடைக்க வழிவகை செய்யும் குடிநீா் மேம்பாட்டு பணி மற்றும் நிரவி கொம்யூன் காவிரி நகா் பகுதிக்கு குடிநீா் விரிவாக்க பணி தொடக்கத்துக்காக, பொதுப்பணித்துறை சாா்பில் ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இரண்டு பகுதிகளில் பணிகள் தொடங்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பணியை தொடக்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், உதவிப் பொறியாளா் அருளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் மூலம் ஆற்றங்கரை பேட் கிராமத்தில் சுமாா் 250 போ், காவிரி நகா் பகுதியில் 280 போ் பயன்பெறுவாா்கள் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com