சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நவ.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 8:22 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாகவும், தனி நபா்கள் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.