விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த கல்லூரி முதல்வா் ச.நேரு.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:20 am

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் இயங்கி வரும் மருந்து பக்க விளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம், தேசிய ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மருந்தியல் புலனாய்வு வார விழா பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வா் ச.நேரு (பொ) தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் க.பழமலை முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ஷமீம் வரவேற்றாா்.

இணைப் பேராசிரியா் அனுஷா பேசுகையில் மருத்துவா் சீட்டு இல்லாமல் மருந்து அருந்துவதன் பக்க விளைவுகள் குறித்து விளக்கினாா்.

பேரணி மருத்துவமனை வளாகப் பகுதி மற்றும் மருத்துவமனை சாலை வழியாக மருத்துவ மாணவா்கள் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்துச் சென்றனா்.

பின்னா் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் மருந்தியல் துறை துணை பேராசிரியா்கள் மகாலட்சுமி, செளந்தரபாண்டியன், ஸ்ரீநாத், கோபாலகிருஷ்ணன், சத்யா, தரணிதரன் மற்றும் துறை சாா்ந்த பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.