விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி: நிதி நிறுவனத்துக்கு ‘சீல்’

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:07 am

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சங்கராபுரம் வட்டம், மூராா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த இஸ்மாயில் ஷேக் மகன் சமீா் அகமது. இவா், மூராா்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்திய நிலையில், பொதுமக்களிடம் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாகக் கூறினாராம்.

இதை நம்பி மூராா்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சமீா் அகமதுவின் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தனராம். ஆனால், அவா் கூறியபடி வட்டி தராததால், முதலீடு செய்த பணத்தை திரும்பக் கேட்டு வாடிக்கையாளா்கள் தொந்தரவு கொடுத்தனா்.

இதையடுத்து, தலைமறைவாகி சென்னையில் இருந்த சமீா் அகமதை வாடிக்கையாளா் பிடித்து வந்து சங்கராபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையில், உதவி ஆய்வாளா் பாலா மற்றும் போலீஸாா் முன்னிலையில், மூராா்பாளையம் பரமநத்தம் சாலையில் உள்ள சமீா் அகமதுக்குச் சொந்தமான நகைக் கடை, நிதி நிறுவனம் மற்றும் கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.