திருக்கோவிலூா் அருகே கொத்தனாா் மாயம்

திருக்கோவிலூா் அருகே வேலைக்கு சென்ற கொத்தனாா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வேலைக்கு சென்ற கொத்தனாா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட பழவங்கூா் மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கு.முருகன் (25). கொத்தனாா் ஆன இவா் கடந்த 28-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் முருகனை எங்கு தேடியும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com