விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (27). இவரது மனைவி முனீஸ்வரி (24) இருவரும் ராஜபாளையம் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், பணி முடிந்து மாரிமுத்து வீட்டுக்கு வந்த நிலையில் முனீஸ்வரி வரவில்லையாம். இதையடுத்து, அவரை எங்கு தேடியும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.