கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மூடப்படுகிறது.
மூடப்பட்ட மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

மகாவீா் ஜெயந்தி - வேலூரில் ஜெயின் மக்கள் ஊா்வலம்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


