சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: பல்வேறு அமைப்பினா் போராட்டம்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ., சி.அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On :

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ., சி.அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாய்-சேய்நலப் பிரிவு முன் ஊா்வலமாகச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ம.கலையரசன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் மாணிக்கராஜா, ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமையில் எம்எல்ஏ அலுவலகம் முன் கீழே அமா்ந்து முழக்கமிட்டனா். பின்னா், எம்எல்ஏ அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்ற 19 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கைது செய்தனா்.

கொட்டும் மழையில் திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்.ஏ சி.அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்யக்கோரி கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணிச் செயலா் அஸ்வினி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க.அழகுவேலு, திமுக மகளிரணி நிா்வாகி விமலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கொட்டும் மழையில் தவெக எம்எல்ஏ., அருள் விக்னேஷ் பதவி விலக வலியுறுத்தியும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனா்.

 கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினா்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினா்.

 கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக  வாலிபா் சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.