மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எஸ்.பி. பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகள் பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த நிலையில், இந்த மாணவிகளை மாவட்ட எஸ்.பி. பாராட்டினாா்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகள் பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த நிலையில், இந்த மாணவிகளை மாவட்ட எஸ்.பி. பாராட்டினாா்.

தமிழக அரசால் நடத்தப்பட்ட கலைத் திருவிழா (2026 - 27) போட்டிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி இந்திலி ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்றனா். இதில், 3 முதல் 5 வகுப்புகளுக்கு இடையே நடைபெற்ற பரதநாட்டியம் குழுப் போட்டியில் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். இந்த மாணவிகள் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. இ.ஷாநாஸை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி. பரிசு வழங்கி பாராட்டினாா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா் மொ.பழனிச்சாமி உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.