தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்கள் திருவீதி உலா

புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்களின் திருவீதி உலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:58 am

DIN

புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 11 நரசிம்மர்களின் திருவீதி உலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நரசிம்மர் ஜெயந்தியையொட்டி இந்தக் கோயிலில் சனிக்கிழமை காலை ஜ்வாலா நரசிம்மர், அஹோபில நரசிம்மர், பானக நரசிம்மர், வராஹ நரசிம்மர், பாவந நரசிம்மர், மாலோல நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், யோக நரசிம்மர், பார்கவ நரசிம்மர் உள்பட 11 நரசிம்மர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 11 நரசிம்மர்களுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.  இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து இரவு 11 நரசிம்மர்கள் மங்களகிரி விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மங்களகிரி தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட 11 நரசிம்மர்கள் திரு வீதி உலா சென்றனர்.  ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.