கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு: மருத்துவ முதுநிலை கலந்தாய்வு தேதியை நீட்டிக்கக் கோரிக்கை
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளதால் கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று


முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளதால் கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து முதல்வர் வே.நாராயணசாமிக்கு, சங்கத்தின் தலைவர் மு.நாராயணசாமி அனுப்பியுள்ள மனு விவரம்:
2018-19ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படிக்க அகில இந்திய இடஓதுக்கீடு மற்றும் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டின் படி மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வில் 312 மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மட்டும் முதுநிலை மருத்துவம் படிக்க தகுதியானவர்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 261 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளதால் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 261 மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்களும் கலந்து கொள்ள வசதியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை நீட்டிக்க வேண்டும். இது குறித்து மாணவர்கள் அறியும் வகையில் விளம்பரங்கள் செய்த பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற குழப்பம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி சென்டாக் இணையதளத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே, புதுவை அரசும் சென்டாக் நிர்வாகமும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு எந்த அடிப்படையில் நடைபெற உள்ளது என்ற தெளிவான விளக்கம் அளித்த பிறகு இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும். அதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டும். எனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை நீட்டிக்க வேண்டும்.
மேலும், சென்டாக் மூலம் முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் சேர்க்காமல் மாணவர்களை அலைக்கழித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சென்டாக் குறைதீர் மையத்திலும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் மீது நடவடிக்கை எடுத்து எத்தனை மாணவர்கள் கல்லூரியில் சோந்துள்ளனர் என்ற விவரங்களைப் பெற்று அதை வெளியிட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...