நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இந்திய கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம் தொடக்கம்

மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.
 பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான எந்த நலத் திட்ட உதவிகளும் செய்யப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
 பாஜக ஆட்சியில் தலித்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத மோடி அரசு பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.
 புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் இப்பிரசாரத்தை கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அஜீஸ் பாஷா புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
 லாஸ்பேட்டை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்த, இந்நிகழ்ச்சியில் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
 மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், துணைச் செயலாளர் கீதநாதன், பொருளாளர் சுப்பையா, நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம், நிர்வாகிகள் சரளா, ஹேமலதா, அந்தோணி, பூபதி, ஏழுமலை, முத்துராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.