தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஜூன் 9-இல் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு முகாம்

தொழிலாளர் துறை சார்பில் ஜூன் 9-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் தெரிவித்தார்.

Updated On :7 ஜூன் 2018, 9:19 am IST

தொழிலாளர் துறை சார்பில் ஜூன் 9-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் தெரிவித்தார்.
 இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 புதுவை அரசு தொழிலாளர் துறை வரும் ஜூன் 9-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் துறை வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
 காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விக்னேஷ் மோட்டக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நேர்முகத் தேர்வை நடத்துகிறது.
 புதுச்சேரியில் காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்பப்படும். 20 முதல் 30 வயது நிரம்பிய பிளஸ் 2, பட்டயம் (இயந்திர பொறியியல்), இளநிலை பட்டம் ஆகிய கல்வித் தகுதி கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். ஊதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்பவர்கள் சுயவிவர குறிப்பு மற்றும் கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.