
சட்டப்பேரவை சாலை தடுப்பு கட்டையால் அடைப்புக்கு எதிர்ப்பு
புதுவை சட்டப்பேரவைக்குச் செல்லும் பாதை தடுப்புக் கட்டையால் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்று அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவைக்குச் செல்லும் பாதை தடுப்புக் கட்டையால் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்று அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் காங்கிரஸ் அரசால் செயல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அரசு பதவியேற்று 26 மாதங்களில் 10 மாதம்கூட இலவச அரிசி வழங்க முடியவில்லை. சென்டாக் கல்வி உதவித்தொகையை காலத்தோடு மாணவர்களுக்கு வழங்க முடியவில்லை.
மாணவர்களுக்கு சீருடை, காலணி, மிதிவண்டி போன்றவற்றைக்கூட வழங்க முடியவில்லை. எந்த ஒரு மாநிலத்துக்கும் எடுத்துக்காட்டாக புதுவை சட்டப்பேரவை திகழும். இங்கு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம், தங்கள் கோரிக்கைகளை கேட்கலாம் என்ற நிலை இருந்தது. மக்களைச் சந்திக்கவே இந்த அரசு முடியாத நிலைக்கு மாறிவிட்டது. சட்டப்பேரவை இருக்கும் திசைக்கே யாரும் வரக்கூடாது என்பதுபோல தடுப்புகளை அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்குக் கூட தடை விதித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதாக புகார் எழுந்தால் அதை முறைப்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதைவிடுத்து சட்டப்பேரவை முன் இருசக்கர வாகனங்களே செல்லக்கூடாது என்ற நிலையை உருவாக்கியிருப்பது கேலிக்கூத்தானது.
பாதுகாப்பு என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவுபாலம் உடைந்து விட்டது. சட்டப்பேரவை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டும் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார் வையாபுரி மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




