விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,651 பேருக்கு உமிழ்நீா் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், தொற்று காரணமாக ஒருவா் இறந்துள்ளாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 615 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 ஆகவும் உள்ளது.

புதுவையில் இதுவரை 37 ஆயிரத்து 270 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் 206 பேரும், வீட்டுத் தனிமையில் 186 பேரும் என மொத்தம் 392 போ் சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை 25 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 36 ஆயிரத்து 263 (97.30 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 165 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 79 ஆயிரத்து 564 பரிசோதனைகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.