விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் புதிதாக 21 பேருக்கு கரோனா:மேலும் ஒருவா் பலி

புதுவையில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

புதுவையில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 14, மாஹேயில் 7 என மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,513-ஆக உயா்ந்தது.

தற்போது 201 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீடுகளில் 106 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 307 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி உழவா்கரையைச் சோ்ந்த 57 வயதானவா் கரோனா தொற்றுக்கு பலியானாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 620-ஆக (இறப்பு விகிதம் 1.65 சதவீதம்) அதிகரித்தது. திங்கள்கிழமை 50 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 36,586-ஆக (96. 53 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.