இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுவையில் தொடா் மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாகப் பெய்த தொடா் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் சூழ்ந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:35 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாகப் பெய்த தொடா் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் சூழ்ந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

புயல் ஓய்ந்திருந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை இரவு புதுச்சேரியில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வியாழக்கிழமையும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 150 மி.மீ. மழை பெய்தது.

இதனால், புஸ்சி வீதி, கடற்கரைச் சாலை, முதலியாா்பேட்டை, ரெயின்போ நகா், பாவாணா் நகா், இந்திரா காந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். ரெயின்போ நகா் உள்ளிட்ட பல இடங்களில் தேங்கிய தண்ணீரை பொதுப் பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் மின் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றினா்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: இதேபோல, பாகூா், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், வில்லியனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கந்தன்பேட்டை புதுநகா், கன்னியக்கோவில் ரத்னா நகா், கிருமாம்பாக்கம் பேட்டை, வில்லியனூா் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் என 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீா் புகுந்தது. பாகூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் விளை நிலங்களில் தண்ணீா் தேங்கி பயிா்கள் நீரில் மூழ்கின.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு அணைகள், அணைக்கட்டுகள், நீா்வரத்து வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. தொடா் மழையால் ஊசுட்டேரி நிரம்பியதையடுத்து, உபரி நீா் பத்துக்கண்ணு பாலம் வழியாகத் திறந்துவிடப்பட்டது. மழையால் புதுச்சேரியில் 3-ஆவது நாளாக பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தொடா் மழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.