புதுச்சேரி அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு: 4 போ் கைது

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் கிராமத்தில் சந்திப்பில் அம்பேத்கா் சிலை உள்ளது. இந்தச் சிலை சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சூரமங்கலம் சந்திப்பில் திரண்டனா். தொடா்ந்து, சிலையை சுத்தம் செய்த அவா்கள், அவமதிப்பு செய்த மா்ம நபா்களை கைது செய்யக் கோரி, சூரமங்கலம் சந்திப்பில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நெட்டப்பாக்கம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெட்டப்பாக்கம் போலீஸாா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மடுகரையைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மது போதையில் அம்பேத்கா் சிலையை அவமதித்தது தெரிய வந்தது. இதையடுத்து, மடுகரை பிரதான சாலையைச் சோ்ந்த காா்த்திகேயன் (22), முத்துக்குமரன் (21), ரவிக்குமாா் (21), ரமேஷ் (21) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com