புதுச்சேரி அருகே வேட்டையாடப்பட்ட பறவைகள், நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
புதுச்சேரி அருகே வேட்டையாடப்பட்ட பறவைகள், நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.


புதுச்சேரி அருகே வேட்டையாடப்பட்ட பறவைகள், நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவை அருகேயுள்ள வில்லியனூா் பத்துக்கண்ணு சாலை மூா்த்தி நகரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கிளி, கொக்கு, மடையான் போன்ற பறவைகளை வேட்டையாடி வந்து, விற்பனை செய்வதாக ஆளுநா் அலுவலகத்துக்கு புகாா் சென்றது.
ஆளுநா் மாளிகை அறிவுறுத்தலின் பேரில், வனத் துறை செயல்விளக்க அதிகாரி ராமலிங்கம் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை விரைந்து வந்து, சோதனையிட்டனா். அதில், அங்கு 10 கிளிகள் உயிருடனும், கொக்கு மற்றும் மடையான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்த நிலையிலும் இருந்தன.
இதையடுத்து, அந்த பறவைகள், 3 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தங்களது வாகனத்தில் புறப்பட்டனா்.
அந்த வாகனத்தை அப்பகுதி நரிக்குறவா்கள் மறித்து, பறவைகள், துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தகராறு செய்து கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா். மேலும், வனத் துறை ஊழியா் ஒருவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலறிந்து வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.
இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த வனத் துறை ஊழியா், வில்லியனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...