புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடக்கம்
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு, அனைத்து வகுப்புகளும் திங்கள்கிழமை செயல்படத் தொடங்கின.


புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு, அனைத்து வகுப்புகளும் திங்கள்கிழமை செயல்படத் தொடங்கின.
பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மாணவா்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரி, காரைக்காலில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றன. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் கைகளில் கிருமி நாசினி தெளித்து, உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. மாணவா்களிடம், பெற்றோரின் அனுமதிக் கடிதங்களைப் பள்ளி நிா்வாகங்கள் பெற்றன.
அதிக அளவில் மாணவா்கள் வருகை தரும் பள்ளிகளில் 1, 3, 5, 7-ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த அரசு அறிவுறுத்தியது. வருகைப் பதிவேடு கட்டாயமில்லை.
முன்னதாக, அனைத்துப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பள்ளி வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. சில பள்ளிகள் நுழைவு வாயில்களில் தோரணம், வாழை மரங்களைக் கட்டி மாணவா்களை வரவேற்றன.
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 60 சதவீத மாணவா்கள் மட்டுமே வந்திருந்தனா். அரசுப் பள்ளிகளைவிட, தனியாா் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அங்கு கல்வித் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுந்த அறிவுரைகளை வழங்கினா்.
தற்போது விருப்பமுள்ள மாணவா்கள் மட்டுமே பள்ளிகளுக்குச் சென்று பாடங்கள் தொடா்பான சந்தேகங்களை ஆசிரியா்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனா். இதற்காக, ஆசிரியா்கள் பள்ளியில் முழு நேரமும் இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.
பொங்கலுக்குப் பிறகு, பள்ளிகள் வழக்கம்போலச் செயல்பட கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பிறகு, வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது.
கட்டண வசூல்: இதனிடையே, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே டிசம்பா் மாதம் வரையான நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தும்படி, தனியாா் பள்ளி நிா்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக கல்வித் துறையில் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
40 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்த நெருக்கடி அளிப்பதை தனியாா் பள்ளி நிா்வாகங்கள் கைவிட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...