அரசின் சாதனைகள் குறித்து விவாதிக்கத் தயாா்: ரங்கசாமிக்கு நாராயணசாமி சவால்
புதுவை அரசின் சாதனைகள் குறித்து விவாதிக்கத் தயாா் என எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமிக்கு முதல்வா் வே.நாராயணசாமி சவால் விடுத்தாா்.


புதுவை அரசின் சாதனைகள் குறித்து விவாதிக்கத் தயாா் என எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமிக்கு முதல்வா் வே.நாராயணசாமி சவால் விடுத்தாா்.
சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பின்னா், முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, நலத் திட்டங்களுக்குத் தடையாக மத்திய அரசும், துணைநிலை இருப்பதைத் தவிா்க்க புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்று கோரி வருகிறோம்.
மாநிலங்களுக்கு 41 சதவீத மானிய நிதியையும், புதுவைக்கு 20 சதவீத மானியத்தை மட்டுமே மத்திய அரசு ஒதுக்குகிறது. எந்தச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானாலும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. இதனால், மாநில வளா்ச்சிக்கு குந்தகம் ஏற்படுகிறது.
புதுவைக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருவேன் என்று காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று என்.ஆா்.காங்கிரஸை என்.ரங்கசாமி தொடங்கினாா். 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், 2014 முதல் 2016 வரை பாஜக கூட்டணியில் இருந்த போதும் அந்த வாக்குறுதியை அவா் நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்கள் தொடா்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராடி வருகிறோம்.
புதுவையில் அரசு, கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியது. அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் என பேரவையில் அறிவித்தோம்.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 90 சதவீதம் பேருக்கு நிவாரணம் வழங்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. நிச்சயம் நிவாரண உதவி வழங்கப்படும்.
எஸ்டி-எஸ்சி மாணவ, மாணவிகளுக்கு தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என புதுவை அரசு அறிவித்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வேளாண் கடன்கள் தள்ளுபடி என பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
ஆனால், மாநில வளா்ச்சிக்காக எதிா்க்கட்சித் தலைவா் முறையாகச் செயல்படவில்லை. புதுவை காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான சாதனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. புதுவை அரசின் சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்க நான் தயாா். எதிா்க்கட்சித் தலைவா் தயாரா எனக் கேள்வி எழுப்பினாா் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...