/

எண்ணெய் நிறுவனத்தில் திருடிய இளைஞா் கைது

புதுச்சேரி அருகே எண்ணெய் நிறுவனத்தில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே எண்ணெய் நிறுவனத்தில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி திருபுவனை அருகே எண்ணெய் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, இரும்பு கம்பிகள், அலுமினியப் பொருள்களை மா்ம நபா் தொடா்ந்து திருடி வந்தாா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரவும் திருடு போனது.

அப்போது, சப்தம் கேட்டு அங்கு சென்ற காவலாளிகள், திருடிய நபரைக் கையும் களவுமாகப் பிடித்தனா். விசாரணையில் அந்த நபா், திருவண்டாா்கோவில் வாய்க்கால் மேட்டுத் தெரு, சின்னபேட்டை பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் வினோத்குமாா் (28) என்பதும், தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கும், திருபுவனை போலீஸாருக்கும் காவலாளிகள் தகவல் அளித்தனா். அதன் பேரில், அங்கு வந்த போலீஸாரிடம், வினோத்குமாரை ஒப்படைத்தனா். நிறுவன அதிகாரி ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோத்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.