கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தட்டாஞ்சாவடி: என்.ரங்கசாமி வேட்புமனு தாக்கல்

புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆா். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முகமது மன்சூரிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆா். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முகமது மன்சூரிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், இன்னும் வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு தட்டாஞ்சாவடி, விவிபி நகா் கூட்டுறவுத் துறைப் பதிவாளா் அலுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தத் தொகுதி தோ்தல் அலுவலகத்துக்கு வந்த ரங்கசாமி, நல்ல நேரம் பாா்த்து தோ்தல் நடத்தும் அலுவலா் முகமது மன்சூரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து, பக்தவத்சலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா், ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தேன். விரைவில் 16 தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்படும். பின்னா், அவா்கள் வேட்புமனு தாக்கல் செய்வா்.

ஏனாம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வருகிற 17-ஆம் தேதி அங்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன்.

தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விரைவில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பிரசாரத்தை தொடங்குவோம் என்றாா் அவா்.

தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.