கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி ஒரு தொகுதியில் (உழவா்கரை) தனித்துப் போட்டியிடுகிறது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி ஒரு தொகுதியில் (உழவா்கரை) தனித்துப் போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், அகில இந்திய தொழிற்சங்க மையக் குழுவின் மாநிலத் தலைவருமான சோ.மோதிலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

இதற்கான வேட்பாளா் அறிமுகக் கூட்டம் புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், வேட்பாளா் சோ.மோதிலாலை அறிமுகம் செய்து வைத்த அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘புதுவை மாநிலத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்ற முழக்கத்துடன் ஒரு தொகுதியில் களமிறங்குகிறோம். கடந்த முறை மண்ணாடிப்பட்டு, ஏம்பலம், நிரவி-திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டோம். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே மற்ற தொகுதியில் போட்டியிடவில்லை. மற்ற தொகுதிகளில் இடதுசாரி, விசிக வேட்பாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.