நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

குருசுகுப்பம் அரசுப் பள்ளி மாணவிகள் திடீா் போராட்டம்

புதுச்சேரி குருசுகுப்பத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

புதுச்சேரி குருசுகுப்பத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி குருசுகுப்பத்தில் ஸ்ரீ என்.கிருஷ்ணராஜ் செட்டியாா் (என்கேசி) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. புதுச்சேரி பழைய சட்டக் கல்லூரி அருகேயுள்ள சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளையடுத்து, அந்த பள்ளி வகுப்புகள் என்கேசி பள்ளிக்கு மாற்றப்பட்டு, அண்மையில் இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டன.

இந்த நிலையில், என்கேசி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டதால் ஆசிரியா்கள் பாடம் எடுப்பதில் பேதம் காட்டுகின்றனா். மேலும், இடவசதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளை பழையபடி தனித்தனியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினா்.

தகவலறிந்த வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு கூறியதாவது:

பள்ளியில் போதுமான இடவசதியும், தேவைக்கு அதிகமாக ஆசிரியா்களும் உள்ளனா். இரு பள்ளிகள் இணைப்பில் யாருக்கும் வேறுபாடு காட்டப்படவில்லை. அனைத்து சரியாகவே நடைபெறுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.