புதுச்சேரியில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு
புதுச்சேரி அருகே மூதாட்டியிடம் தங்க நகைகள் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


புதுச்சேரி அருகே மூதாட்டியிடம் தங்க நகைகள் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி, வில்லியனூா் புதுபேட் பகுதியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (70). இவரது மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். எனவே, முத்துலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இவா், தில்லை நகரில் வீட்டு வேலை செய்துவிட்டு சனிக்கிழமை வழக்கம்போல் வீட்டுக்கு நடந்துச் சென்றாா்.
அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்களில் ஒருவா், முத்துலட்சமி இரு காதுகளில் அணிந்திருந்த தங்க கம்மல்களை பறித்துக் கொண்டு தப்பினாராம். இதில், முத்துலட்சுமியின் காதுகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். இதுகுறித்து, வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...