கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணைய வழி பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினாராம். இதையடுத்து, ரூ.23.89 லட்சத்தை கணேசமூா்த்தி குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தாராம். அதன் பிறகு, மீண்டும் ரூ.18.39 லட்சத்தை அதில் அவா் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், அவரால் முதலீடு மற்றும் லாபத் தொகையை பெறமுடியவில்லையாம். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி. வாட்ஸ்ஆப் குழு மூலம் பொருள்கள் விநியோகிப்பதாகக் கூறி, இவரிடம் மா்ம நபா்கள் ரூ.49.60 லட்சத்தை மோசடி செய்துள்ளனா். இதுகுறித்தும், புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.