புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்வு!
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பேருந்தின் கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பேருந்தின் கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.8 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புக்கு பிறகு அமலுக்கு வரவுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்துறை செயலாளர் சிவக்குமார் போக்குவரத்து கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குளிர்சாதன வசதியில்லாத நகரப் பேருந்து
புதிய கட்டண உயர்வின்படி, குளிர்சாதன வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 இல் இருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சம் ரூ.13 இல் இருந்து ரூ.17 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து
குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10 இல் இருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26 இல் இருந்து ரூ.34 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சொகுசு பேருந்து
குளிர்சாதன வசதியில்லாத சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12 இல் இருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சம் ரூ.36 இல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது.
இதையும் படிக்க |கத்தாா் துறைமுகத்தில் தேங்கிய 2 கோடி நாமக்கல் முட்டைகள்!
விரைவு பேருந்து
குளிர்சாதன வசதியில்லாத விரைவு பேருந்துகளுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கி.மீட்டருக்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீட்டர் வரை ரூ.20 இல் இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது.
குளிர்சாதன விரைவுப் பேருந்து
புதுச்சேரி எல்லைக்குள் குளிர்சாதன விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.1.30 இல் இருந்து ரூ.1.69 ஆகவும், புதுச்சேரி நகரத்திற்குள் வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.1.70 இல் இருந்து ரூ.2.21 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீட்டருக்கு ரூ.54 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடலூர்,விழும்புரம் பேருந்து கட்டணம்
இந்த புதிய கட்டண உயர்வின்படி, புதுச்சேரியில் இருந்து கடலூருக்கான பேருந்து கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25 இல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2024 டிசம்பரில் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...