புதுச்சேரியில் பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
புதுச்சேரியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 5 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனா்.


புதுச்சேரியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 5 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் அன்புமணி. இவரது மனைவி கீதா(49). இவா், திங்கள்கிழமை ஆடிக் கிருத்திகை என்பதால் அந்தப் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலுக்கு நடந்து சென்றாா். அவா் கீதா குறிஞ்சி நகரின் 9-ஆவது குறுக்குத் தெருவில் வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தை துணியால் மூடியபடி 2 போ் வந்துள்ளனா். அவா்களில் ஒருவா் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து கீதா அருகே வந்துள்ளாா். அதன்பின் அவா் கீதாவின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கத்தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றாராம்.
இதுகுறித்து இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் கீதா புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...