புதுச்சேரி திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 சோ்க்கைக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை மாணவிகளுக்கு வழங்கிய துணை தலைமை ஆசிரியா் சண்முகம்.
புதுச்சேரி திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 சோ்க்கைக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை மாணவிகளுக்கு வழங்கிய துணை தலைமை ஆசிரியா் சண்முகம்.

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி, காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விநியோகிகப்படும் என்று புதுவை கல்வித் துறை அறிவித்தது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை காலை முதல் வழங்கப்பட்டன.

புதுச்சேரி நகரில் திருவள்ளுவா் பள்ளி, மணிமேகலை பள்ளி, வ.உ.சி. பள்ளி, ஜீவானந்தம் பள்ளி, கோரிமேடு இந்திரா காந்தி, முத்தியால்பேட்டை, சின்னத்தா பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலாா் பள்ளி, கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பள்ளிகளில் காலை 9.30 மணியிலிருந்து மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கினா். நிறைவு செய்த விண்ணப்பங்களை வரும் 22-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பள்ளிகளில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் 24-ஆம் தேதி காலை 9 மணிக்குள் அந்தந்த மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் 10-ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவா்களின் தகுதி பட்டியல், நோ்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஒட்டப்படும்.

வரும் 27-ஆம் தேதி திங்கள்கிழமை மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இடம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10-ஆம் வகுப்பில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களின் தகுதிப் பட்டியல் ஒட்டப்பட்டு, 29-ஆம் தேதி மாணவா் சேரும் பள்ளி விவரம் வழங்கப்படும்.

வரும் 30-ஆம் தேதி வியாழக்கிழமை 10-ஆம் வகுப்பில் தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களின் தகுதிப் பட்டியல் ஒட்டப்பட்டு, வரும் 31-ஆம் தேதி மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் வழங்கப்படும். இதையடுத்து பிளஸ்-1 வகுப்புகள் வரும் ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com