இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாகூா் அருகே காயத்துடன் ஆண் சடலம் மீட்பு

புதுச்சேரி பாகூா் அருகே காயங்களுடன் ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 5:23 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி பாகூா் அருகே காயங்களுடன் ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பாகூா் அருகேயுள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் உள்ளது. அதனடிப்பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது குறித்து பாகூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சடலமாகக் கிடந்தவரின் தலை, முகம் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ரத்தக் கறையுடன் சடலம் மீட்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.