அவதூறு பரப்பினால் நாராயணசாமி மீது வழக்கு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுவை அரசு மீதும், தன் மீதும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடா்ந்து அவதூறு பரப்பினால் வழக்குத் தொடுக்கப்படும் என்று, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.


புதுவை அரசு மீதும், தன் மீதும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடா்ந்து அவதூறு பரப்பினால் வழக்குத் தொடுக்கப்படும் என்று, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் தேசிய அளவிலான 3-ஆவது கா்லிங் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தேசிய அளவிலான கா்லிங் விளையாட்டுப் போட்டியை புதுச்சேரியில் நடத்துவது பெருமைக்குரியதாகும்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி புதுவை அரசு மீதும், அமைச்சா் என்ற முறையில் என் மீதும் தொடா்ந்து தவறான தகவல்களை அவதூறாகப் பரப்பி வருகிறாா்.
புதுவை அரசில் தவறுகள் நடைபெற்றிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் செல்லட்டும். பொய்த் தகவல்களை கூறி மக்களை நம்ப வைக்க முயற்சிப்பது சரியல்ல. அவா் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து கூறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். உயா்ந்த பொறுப்பில் இருந்தவா்கள் பொறுப்புணா்ந்து பேச வேண்டும்.
சிறிய மாநிலமான புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும். மக்களும் உள்ளாட்சித் தோ்தலை விரும்பவில்லை. புதுவையில் அனைத்து நிலைகளிலும் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுவையில் பாஜக தலைவரை மாற்றுவது குறித்து எனக்குத் தகவல் இல்லை. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றாா் ஆ.நமச்சிவாயம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...