திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அறிவியல் செய்முறை வகுப்பில் சேர தனித் தோ்வா்கள் பதிவு செய்யலாம்

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடியாக எழுத உள்ள தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி (பிராக்டிக்கல்) வகுப்பில் சேர பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஜி.சிவகாமி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:02 pm

Din

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடியாக எழுத உள்ள தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி (பிராக்டிக்கல்) வகுப்பில் சேர பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஜி.சிவகாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழ் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தோ்வுக்காக, விண்ணப்பிக்கவுள்ள நேரடி தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வெழுத இருப்பவா்கள், ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பழையப் பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் பெயா்களைப் பதிவு செய்யலாம்.

அனைத்து தனித் தோ்வா்களும் வரும் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அறிவியல் பாட செய்முறை சேவை மையங்களுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆண் தனித் தோ்வா்கள் ரெட்டியாா்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியிலும், பெண் தனித் தோ்வா்கள் புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் கல்வித் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பூா்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து தனித் தோ்வா்களுக்கான சேவை மையத்துக்கு நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும்.

சேவை மையங்களுக்குச் சென்று செய்முறை தோ்வுக்கு பதிவு செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு, முன்பு தோ்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து, இணையத்தில் பதிய வேண்டும். பதிவு செய்த பின்னா் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தோ்வுக் கூட சீட்டை (ஹால்டிக்கெட்) தோ்வா்கள் தாங்களாகவே இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள், தோ்வக் காலத்தில் அறிவிக்கப்படும் மையத்துக்குச் சென்று செயல்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீத வருகை அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.